search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துருக்கி அதிபர் தேர்தல்"

    • துருக்கி அதிபர் தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை.
    • இதனால் வரும் 28-ம் தேதி அதிபர் தேர்தலின் 2-வது சுற்று நடைபெற உள்ளது.

    அங்காரா:

    துருக்கியில் அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகனும், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் கெமால் கிலிக்டரோக்லுவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    துருக்கியை பொறுத்தவரை அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற வேண்டும். இதில் அதிபர் எர்டோகன் சுமார் 49.50 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளார். எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட கெமால் கிலிக்டரோக்லு 44.79 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளார்.

    இந்நிலையில், அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் வரும் 28-ம் தேதி அதிபர் தேர்தலின் 2-வது சுற்று நடைபெறும் என அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் கடந்த 2003-ம் ஆண்டு முதல் அங்கு ஆட்சி செய்து வருகிறார்.
    • 2016-ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்ற முற்பட்டபோது அதனை முறியடித்து தனது பதவியை எர்டோகன் தக்க வைத்துக் கொண்டார்.

    அங்காரா:

    துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் (வயது 69) கடந்த 2003-ம் ஆண்டு முதல் அங்கு ஆட்சி செய்து வருகிறார். 2003-ல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட எர்டோகன் 2014-ம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்தார். ஆனால் 2014-ல் பிரதமர் பதவி கலைக்கப்பட்டு நாட்டின் உச்சபட்ச அதிகாரமாக அதிபர் பதவி கொண்டு வரப்பட்டது.

    இதனையடுத்து 2014-ம் ஆண்டு எர்டோகன் துருக்கி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுமுதல் கடந்த 9 ஆண்டுகளாக அவர் அங்கு அதிபராக செயல்பட்டு வருகிறார்.

    2016-ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்ற முற்பட்டபோது அதனை முறியடித்து தனது பதவியை எர்டோகன் தக்க வைத்துக் கொண்டார். அதன்பிறகு தனது அதிகாரத்தை மேலும் அதிகப்படுத்திக் கொண்டார். இவ்வாறு பிரதமர், அதிபர் என 20 ஆண்டுகளாக எர்டோகன் துருக்கியில் ஆட்சி செய்து வருகிறார்.

    தற்போது வேகமாக அதிகரித்து வரும் பண வீக்கம், நிலநடுக்கத்தின்போது போதுமான மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளாததால் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பு என பொதுமக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும் சர்வாதிகார ஆட்சி நடத்துவதாகவும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

    இந்த நிலையில் துருக்கியில் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. சர்வாதிகார நாடு என்ற நிலையை மாற்றுவதற்காக அங்குள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எர்டோகனுக்கு எதிராக கெமல் கிலிக்டரோக்லு தலைமையில் போட்டியிட்டனர். அதேபோல் எம்.பி.க்களுக்கான தேர்தலும் நேற்று துருக்கியில் நடந்தது.

    இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான கெமல் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த எர்டோகனின் சர்வாதிகாரம் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பில் பலர் உள்ளதாக கூறப்படுகிறது.

    துருக்கி அதிபராக தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள தாயிப் எர்டோகனுக்கு பிரிட்டன் பிரதமர் தெரசா மே வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். #TurkeyElection #Erdogan #VladimirPutin #TherasaMay
    லண்டன்:

    550 இடங்களை கொண்ட துருக்கி நாட்டு பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. அதில், 52.5 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று தாயிப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் துருக்கியின் அதிபராக தொடர்ந்து இரண்டாவது முறை பதவியேற்க உள்ளார் எர்டோகன். 

    இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற தாயிப் எர்டோகனுக்கு பிரிட்டன் பிரதமர் தெரசா மே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், துருக்கி அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள எர்டோகனுக்கு வாழ்த்துக்கள். பிரிட்டன் மற்றும் துருக்கி இடையிலான இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவதற்கு இணைந்து செயல்படுவோம். மேலும், பிராந்திய பகுதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சிரியாவில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு  தேவையான ஒத்துழைப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். #TurkeyElection #Erdogan #TherasaMay
    துருக்கி அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட தாயிப் எர்டோகன் மீண்டும் அதிபர் பதவியை கைப்பற்றியுள்ளார். #TurkeyElection #Erdogan
    அங்காரா:

    550 இடங்களை கொண்ட துருக்கி நாட்டு பாராளுமன்றத்துக்கு கடந்த 1-11-2015 அன்று தேர்தல் நடைபெற்றது. பாராளுமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் வரும் அடுத்தாண்டு வரை இருக்கும் நிலையில், முன்னதாகவே தேர்தலை நடத்த அதிபர் தாயிப் எர்டோகன் முடிவெடுத்தார்.

    அதன்படி, அதிபர் தேர்தலின் போது பாராளுமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் நடத்தும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதிபர் தேர்தலில் தனக்கு செல்வாக்கு நிலவுவதால், அதன் மூலம் பாராளுமன்றத்திலும் அதிக இடங்களை வெல்லலாம் என்ற கணக்கில் எர்டோகன் இந்த ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    இதற்கிடையே, அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. ஏ.கே. கட்சி சார்பில் தாயிப் எர்டோகனும், குடியரசு மக்கள் கட்சி சார்பில் முஹாரம் இன்ஸ் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

    இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 98 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் 53 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று தாயிப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு மக்கள் கட்சி வேட்பாளர் முஹாரம் இன்ஸ்சுக்கு 31 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

    அதிபர் மற்றும் பாராளுமன்றத்துக்கான தேர்தலில் வெற்றி பெற்ற தாயிப் எர்டோகன் மீண்டும் அதிபராகிறார். தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கியதும் எர்டோகன் வெற்றி பெற்றதை அறிந்து அவரது கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

    அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. #TurkeyElection #Erdogan
    துருக்கி அதிபர் பதவிக்கான மற்றும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். #TurkeyElection #Erdogan
    அங்காரா:

    550 இடங்களை கொண்ட துருக்கி நாட்டு பாராளுமன்றத்துக்கு கடந்த 1-11-2015 அன்று தேர்தல் நடைபெற்றது. பாராளுமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் வரும் அடுத்தாண்டு வரை இருக்கும் நிலையில், முன்னதாகவே தேர்தலை நடத்த அதிபர் தாயிப் எர்டோகன் முடிவெடுத்தார்.

    அதன்படி, அதிபர் தேர்தலின் போது பாராளுமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் நடத்தும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதிபர் தேர்தலில் தனக்கு செல்வாக்கு நிலவுவதால், அதன் மூலம் பாராளுமன்றத்திலும் அதிக இடங்களை வெல்லலாம் என்ற கணக்கில் எர்டோகன் இந்த ஏற்பாடுகளை செய்திருந்தார்.



    இந்நிலையில், அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் ஏ.கே கட்சியின் சார்பில் கடந்த 2014-ல் எர்டோகன் முதன் முறையாக அதிபரானார். எதிர்ப்பலைகள் இல்லை என்பதால் இரண்டாவது முறையாக அதிபராக அவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனினும், அதிபர் போட்டியில் உள்ள குடியரசு மக்கள் கட்சியின் முஹாரம் இன்ஸ் கடும் சவால் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 56 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது.

    பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 
    ×